இத்தாலியில் மாஃபியா காங்கில் இருந்த கமினியோ என்ற நபர், 2 பேரை கொலை செய்தார். பின்னர் பொலிசார் அவரை கைது செய்யவே நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கியது. ஆனால் சிறையில் இருந்து எப்படியோ தப்பிய கமினியோ ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று 20 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இன் நிலையில் அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள வீதி ஒன்றில், ஒரு கடையின் முன்னால் நின்று தனது நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தவேளை. அந்த வழியே வந்த கூகுள் கார் கடைகளையும் வீதிகளையும் படம் எடுக்கும் போது இவரையும் சேர்த்து படம் எடுத்து விட்டது. அதன் பின்னர் பல நாட்கள் கழித்து,…
இத்தாலியில் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர் ஒருவர், ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல இருந்தார். அவர் சில முக்கிய இடங்களை கூகுள் ஸ்ரி ட் மேப் மூலம் பார்த்துள்ளார். அதே நேரம் அவர் இந்த மாஃபியா கொலையாளியை அடையாளம் கண்டு பிடித்து, அந்த புகைப்படத்தை எடுத்து தனது பேஸ் புக்கில் போட்டு, கொலையாளி ஸ்பெயில் இருக்கிறார் என்று பதிவு போட்டார். இதனை அடுத்து இத்தாலிய பொலிசார் ஸ்பெயின் நாட்டு பொலிசாரை தொடர்பு கொள்ள. தீவிரமாக நடந்த தேடுதலில், 20 வருடங்கள் கழித்து , தப்பிய குற்றவாளி கமினியோ தற்போது கைதாகியுள்ளார். அவருக்கு தற்போது 60 வயது. இனி சிறைச்சாலை சென்றால். அவரால் சாகும் வரை வெளியே வர முடியாது. முன்னரே அவர் தனது தண்டனைக் காலத்தை , அனுபவித்து இருந்தால் எப்பொழுதோ வெளியே வந்திருப்பார். விதி யாரைத் தான் விட்டது ?