கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

இரத்தினபுரி பாதையின் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

48 வயதுடைய மினுவாங்கொட கல்லொழுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாணந்துறை -இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் அடையாளந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் ஒருவர் இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டுபிடிக்கப்படும் போது உள்ளாடை மாத்திரமே அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட நபர் தனது சொகுசு காரை பிரபல இரண்டு டாக்சி நிறுவனங்களில் பதிவு செய்து, வாடகை பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும், அவ்வப்போது வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இங்கிரிய பொலிஸாரால் அடையாளந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக முறைப்பாட்டாளருக்கு அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்குச் சென்ற அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை ஒருவாரத்திற்குள் பிரபல தமிழ் வர்த்தகர் , மற்றுமொரு வர்த்தகர் உட்பட மூவர் தென்பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad