யாழ் பிரபல சைவ உணவகத்தில் வாங்கிய வடைக்குள் கரப்பான் பூச்சி!

யாழ்.நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடைக்குள் கரப்பான் பூச்சி இருந்தமை தொடர்பாக யாழ்.மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். 

காங்கேசன்துறை வீதியில் வண்ணை சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி வீடு சென்று வடையை சாப்பிட்டபோது வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக குறித்த நபர் யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு அறிவித்ததன் அடிப்படையில் யாழ்ப்பாணமாநகரசபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கடையினை பரிசோதித்ததோடு 

கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad