பிரான்ஸ் தமிழர்களின் 50 கோடி ரூபாயை சுருட்டிய வவுனியா செந்தூரன்.

பிரான்சில் உள்ள தமிழர்கள் பலரது சீட்டுப் பணத்துடன் தலைமறைவாகியுள்ளான் வரதன் செந்துாரன் என்பவன். இவன் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டன் எனத் தெரியவருகின்றது.

பிரான்சில் வசிக்கும் 85 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 21 ஆயிரம் யூரோவுக்கு மேலான சீட்டுப் பணத்தை பெற்றபின் இவனும் இவனது மனைவியும் பிரான்சிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

தலைமறைவான வரதன் செந்துாரன் பிரான்ஸ் தமிழர்களிடம் சுருட்டிய 50 கோடி ரூபாக்களைம் இலங்கையில் உள்ள அவனது மச்சானின் பெயரில் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்துாரனின் மச்சான் அஜய் இந்தப் பணத்தில் வவுனியாவில் 2ம் குறுக்குத் தெருக்கு அண்மையில் திருமணம மண்டபம் மற்றும் றெஸ்ரோறன்ட் என்பவற்றை கட்டி நடாத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரதன் செந்துாரன் தலைமறைவான பின் அவனது வவுனியா மச்சான் அஜய்க்கு 0777111312 அல்லது 0242227575 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு பிரான்சிலிருந்து தொடர்பு எடுத்துள்ளனர்.

பணத்தை இழந்த பலரை கடுமையான முறையில் வவுனியாவிலிருந்து அச்சுறுத்தியுள்ளான் அஜய். அத்துடன் வவுனியாவிலுள்ள சிலரையும் இவன் அச்சுறுத்தி வருவதாகத் தெரியவருகின்றது.

தலைமறைவாகியுள்ள செந்துாரன் தொடர்பான தகவல்களை அறிந்தால் உடனடியாக அவன் தங்கியுள்ள நாட்டுப் பொலிசாருக்கு அறிவுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அல்லது இவரை நீங்கள் யாரும் கண்டால் ….0652966679 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

இவரால் சில குடும்பம் நடு வீதியில் நிற்கிறது. அத்துடன் வவுனியாவில் உள்ள அஜய் எவ்வாறு பணத்தை பெற்றார் என்பது தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுக்குமாறு பணத்தை இழந்த புலம்பெயர் தமிழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

அந்த அந்த நாட்டில் இருந்தே இலங்கையில் உள்ள குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை பொலிஸ்மா அதிபர் ஊடாக தெரியப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad