இந்த சம்பவம் உலக மக்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த கப்பலில் 250,000 டொலர் செலுத்தி பெரும் செல்வந்தர்கள் பயணம் செய்திருந்தனர்.
கடந்த 18 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்தது.
இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கடலுக்கு அடியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த விபத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் வெவ்வேறு காரணங்களை கூறிவரும் நிலையில், இலங்கையை சேர்ந்த தேரர் ஒருவர் குறித்த நீர்மூழ்கிக் கப்பலை இராட்சத மீன் கடித்து விழுங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலை பெரிய மீன் விழுங்கியிருக்கலாம் என துறவிகள் கூறுவதாக தேரர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நீர்மூழ்கிக் கப்பலை இரண்டு அல்லது மூன்று முறை மீன் கடித்து விழுங்கியிருக்கலாம் என்றும், இந்த மீன் டைட்டானிக் கப்பலைக் கூட விழுங்கும் திறன் கொண்டது என்றும் துறவிகள் கூறிள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.