உடலில் டாட்டூஸ் போடுவதால் என்னென்ன தீமைகள் தெரியுமா..? எச்சரிக்கை பதிவு..!!

ஆண்களும் பெண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

அதில் தற்போது “டாட்டூஸ்” என்று சொல்லப்படும் பச்சைக்குத்தி கொள்வது மிகவும் பிரபலமாக உள்ளது.

ஆண்கள் பெண்கள் என இருபாலரும் டாட்டூஸ் போடுவதை அதிகம் விரும்புகின்றனர்.

பச்சை குத்தி கொள்வதில் இரண்டு வகை உண்டு. ஒன்று தற்காலிகமாக இருக்கும் டாட்டூஸ். இது விரைவில் அழிந்துவிடும். மற்றொன்று, நிரந்தரமாக இருக்கும் டாட்டூஸ். இந்த முறையில் பச்சை குத்தினால், வாழ்நாள் முழுவதும் உடலில் இருக்கும்.

இந்த டாட்டூஸ் போடுவதால் என்னென்ன தீமைகள் உண்டாகிறது என்பதை பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க…..

ஊசி போன்ற ஒரு கருவியில் ரசாயனம் கலந்த மை நிரப்பி, உடலில் வரைவதே ‘டாட்டூஸ்’. இதை பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

தற்காலிக டாட்டூஸ் போடுவதால் வலிகள் ஏற்படுவதில்லை. ஆனால் நிரந்தரமாக போடும் போது கட்டாயம் வலி இருக்கும்.

டாட்டூஸ் போட்ட பின் அந்த இடத்தில் 10 நாட்களுக்கு அரிப்பு இருக்கும்.

அதெற்கென்று இருக்கும், தரமான நிபுணர்களிடம் போட்டால் அவர்கள் நல்ல இங்க் பயன்படுத்துவார்கள்.

அதுமட்டுமின்றி உங்களது சருமத்திற்கு எந்தவித இங்க் பொருந்தும் என்பதை அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக அறிந்திருப்பார்கள்.

பர்மனென்ட் டாட்டூஸ் போட்ட இடத்தில் 20 நாட்களுக்கு சூரியஒளி படமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டாட்டூஸ் மீது தண்ணீர் படலாம். ஆனால் சோப்பு போன்ற எந்த வித கெமிக்கல்களும் படக்கூடாது.

டாட்டூஸ் போடுவதால் இரத்தம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. எய்ட்ஸ் உள்ள ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசிகளை உங்களுக்கு பயன்படுத்தினால், எய்ட்ஸ் பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தரமற்ற டாட்டூஸ் போடும் இடங்களுக்கு சென்று டாட்டூஸ் போடுவது நிச்சயம் தவிர்க்கபட வேண்டியது அவசியம்.

அங்கே சுத்தமற்ற ஊசிகளை அவர்கள் பயன்படுத்தினால், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்.

டாட்டூஸ் போடுவது ஆரோக்கியத்துடனும் சம்பந்தபட்டது. எனவே தரமான இடங்கள் மற்றும் நல்ல நிபுணர்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad