உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஆபாசமான ஆடை பற்றி விமர்சித்தவருக்கு டாப்ஸி பதிலடி (புகைப்படம் உள்ளே)

சமீபத்தில் நடிகை டாப்சி மிகவும் கவர்ச்சியான ஆடையுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

அதை பார்த்த ஒருவர், "இப்படி உடை அணிவதால் தான் ஆண்கள் பெண்களிடம் தவறாக நடக்கவேண்டும் என தோன்றும்" என ட்விட்டரில் கூறியுள்ளார்.

அதற்கு பதிலடி அளித்துள்ள டாப்ஸி "அப்படி என்றால் முதலில் அவர்கள் குரூர புத்தியை மாற்றவேண்டும், ஆடையை அல்ல" என கூறியுள்ளார்.

மேலும் காசுக்காக ஆடையை குறைத்து நடிப்பது பற்றி கேள்வி கேட்ட ஒருவருக்கு பதிலளித்த டாப்ஸி "உங்களை போன்ற கலாச்சார காவலர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்" என விமர்சித்துள்ளார்.