உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

பூமி சுற்றுவதை நிறுத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள்!! மர்மமாக திகழும் உண்மை!!

நாம் வாழும் இந்த பூமியானது 365 நாட்களும் தன்னை தானே சுற்றி கொண்டும் சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்று எல்லோருக்குமே தெரிந்த விடயம்.

ஆனால் இந்த பூமி திடிரென்று சுற்றுவது நிறுத்திவிட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது கற்பனை செய்ததுண்டா? ஒருவேளை அப்படி நடந்தால் என்னவாகும் என்று பார்க்கலாம். பூமி சுற்றுவதை நிருத்தினால் ஏற்படும் 7 வினோத நிகழ்வுகள் உண்டாகும்..

1)மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 1670 கீ.மி வேகத்தில் சுற்றும் பூமியானது திடிரென்று சுழற்சியை நிறுத்தும் பொழுது பூமியுடன் உறுதியாக பிணைக்கப்படாத அத்தனை பொருட்களும் உயிரினங்களும் கிழக்கு நோக்கி வீசி எறியப்படும்.

2)கடல் நீரும் பூமியுடன் உறுதியாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை எனவே பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது அதிக அளவிலான சுனாமி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது.

3) பூமி தன்னை தானே சுற்றுவது நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றி கொண்டு தான் இருக்கும் எனவே வருடத்தில் 6 மாதங்கள் இருளிலும் மீத ஆறு மாதங்கள் முற்றிலுமாக ஒளியிலும் காணப்படும். தொடர்ந்து 6 மாதங்கள் சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில் அதிக அளவிலான வெப்பம் இருக்கும்.

4) இதனால் இருளில் உள்ள 6 மாதங்கள் பனி பிரதேசமாகவும் மீத 6 மாதம் ஒளியில் உள்ளவை பாளை வனமாகவும் மாறிவிடும். இந்த மாற்றத்தை தாங்காமல் நுண்ணுயிர்கள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும்.

5) சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாக மேற்கில் தோன்றி கிழக்கில் மறையும். இதுமட்டுமல்லாமல் இந்த வினோத நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.

6) பூமி சுழற்சியை நிறுத்தும் பொழுது வளி மண்டலதில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிக பெரிய அணுக்குண்டு வெடிப்பினை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் மிக பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

7) பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்தும் அடுத்த நொடியே பூமியை சுற்றியுள்ள பாதுகாப்பு காந்த மண்டலம் செயல் இழந்து போய்விடும். இதனால் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர்கள் மீதம் உள்ள உயிர்களையும் அழித்துவிடும்.
எமது பக்கத்தில் உள்ள விளம்பரம் ஒன்றினை பார்வையிட்டு உங்கள் ஆதரவுகளை எமக்கு வழங்குங்கள்.