தொடர்பை துண்டித்த காதலன். அடுக்குமாடியில் இருந்து குதித்த 14 வயது மாணவி.

தொலைபேசி காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 14 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களின் முன், பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு, இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்கள் நீடித்த காதல் உறவை, சில தினங்களின் முன் இளைஞன் துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவி, அடுக்கு மாடி குடியிருக்கிலிருந்து தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.