இன்று முதல் கியூ-ஆர். முறைமையில் மட்டும் எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் அல்லது கியூ-ஆர். முறையின் பிரகாரம் இன்று முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இன்று முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கிகள்,தோட்டக்கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களை பயன்படுத்துவோர் தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தெரிவு ஆகியவற்றை அந்ததந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் (01) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து ஒவ்வொருவருக்குமான ஒதுக்கீட்டை பெறுவதற்கான சந்தர்ப்பம் வாரம் முழுவதும் கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கியூ-ஆர்

இதேவேளை, எரிபொருளைப் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணிந்து வராத எவருக்கும் எரிபொருளை விநியோகிக்கப்போவதில்லை என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமென அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கியூ-ஆ

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad