கணவனை விட்டு ஆண் வேடமிட்ட பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்!


ஆண் வேடமிட்டு வாழ்ந்த பெண்ணுடன் காதல் வசப்பட்டு விடுதியில் ஒன்றாக தங்கியிருந்த பெண் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இறக்குவாணை பகுதியை சேர்ந்த யுவதியொருவர் திருமணம் முடித்த சில மாதங்களிலேயே கணவருடன் முரண்பட்டு, கொழும்பிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் வேலை செய்த சமயத்தில், காதல் வசப்பட்டுள்ளார். இருவரும் சில நாட்கள் காதல் வசப்பட்ட பின்னர், அவிசாவளையிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர்.

தனது மகள், கணவனுடன் முரண்பட்டு கொழும்பிற்கு சென்று, பின்னர் அவிசாவளையிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருப்பதை அறிந்த தாயார், அவிசாவளை விடுதிக்கு சென்று, மகளுடன் பேசி வீட்டுக்கு அழைத்து சென்றார்.

தனியே வர மறுத்த மகள், தனது காதலன் என குறிப்பிட்ட நபரையும் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

மகளின காதலனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாயார், அது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பந்தப்பட்ட இருவரையும் பொலிசார் அழைத்து விசாரணை செய்ததில், ஆண் வேடமிட்டு வாழ்ந்தது ஒரு பெண் என்பது தெரிய வந்தது.

இருவரும் ஒரு பால் உறவில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில், இரண்டு பெண்கள் ஒள்றாக வாழ்வது பிரச்சனையை ஏற்படுத்தும் என, அவர் ஆண் வேடமிட்டது தெரிய வந்துள்ளது.

இருவரையும் அவர்களின் பெற்றோரிடம் பொலிசார் ஒப்படைத்தனர்.